26 சிங்கூர் மற்றும் நந்திக்கிராம் நிலத் தகராறு சிங்கூர் மற்றும் நந்திகிராம பகுதிகளில் இடதுசாரி கட்சிகளின் நிலத்தைக் கையகப்படுத்தும் கொள்கைகளும் அதனை எதிர்த்துப் போராடும் பூமி உச்சேத் பிரதிரோத குழுவின் போராட்டமும் இந்த அறிக்கை மாநில அரசு சிங்கூர் மற்றும் நந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலப் பகுதிகளை தொழில்துறை வளர்ச்சிக்காக கையகப்படுத்திய விவரங்களும் , அது குறித்து இடதுசாரியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே நிகழ்ந்து வரும் எல்லைத் தகராறும் , இதற்காக ஏழைஎளிய மக்களைக் கொடூரமாகக் கொன்றதும் , பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு தரப்புகளைச் சார்ந்த மக்களின் எதிர்ப்பும் கண்டனமும் பற்றிய விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். 27 சீன இந்திய உறவு பொருளாதாரம், அரசியல் செயலாட்சி நயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொதுத்துறை வானப்பயணம் ஆகிய விஷயங்கள் சார்ந்த இந்திய சீன இருதரப்பு உறவு இந்தியாவுக்கும் சீனதேசத்துக்கும் இடையே பொருளாதாரம், அரசியல் செயலாட்சி நயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய விஷயங்கள் குறித்த நல்லுறவு பற்றி இந்த ஆவணம் கூற வேண்டும். 28 ஈரானின் அணுசக்தி திட்டம் ஈரானின் அணுசக்தி திட்டமும் அது குரித்து உலக கருத்தும். ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றியும் ஈரானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தமும் இது குறித்த உலகக் கருத்தும் இந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். 29 சுனாமிக்குப் பின் வழங்கப்பட்ட உதவி .சுனாமிக்கடுத்த உதவி விவரங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வழங்கப்பட்ட நிதியுதவி, பல அரசுகளும் அரசல்லாத நிறுவனங்களும் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்படோரைப் போய்ச்சேராத பிரச்சனை பற்றியும் இந்த விவர அறிக்கையில் கூறப்பட்டிருக்க வேண்டும் 30 இந்திய ரயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் லாலு பிரசாத் யாதவின் செயல்திறனும் அவருடைய பணிக்காலத்தில் இந்திய ரயிலின் நிலைமையும் இந்திய ரயில்வேயிலுள்ள பாதுகாப்பு அம்சங்களும் அதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் மற்றும் லாலு பிரசாத் யாதவின் பணிக்காலத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றியும் இந்த அறிக்கை கூற வேண்டும். 31 காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் காஷ்மீரின் பல பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் இந்த அறிக்கை காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் அரசு மக்களுக்கு வழங்கிய உதவியைப் பற்றியும் கூற வேண்டும். 32 காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக்கட்சிகளுடன் உள்ள உறவும் நிகழும் ஐக்கிய முற்போக்கு அணியின் அரசில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவு. குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு அணி அரசும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தோழமை கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, தெலுங்கு தேசம், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் உள்ள உறவு பற்றியும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பற்றி இந்த அறிக்கை விவரமாகக் கூற வேண்டும். 33 அமெரிக்க அதிபர் புஷின் இந்திய வருகை அதிபர் புஷின் இருபருவ ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள முதல் முறை அதிபர் புஷின் இந்திய வருகை, அவர் ஹைதராபாத்திற்கும் மற்ற சில கிராமப்புறங்களுக்கும் மேற்கொண்ட சுற்றுப்பயணம் பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும் 34 ஜெஸ்ஸிகா லால் கொலை ஜெஸ்ஸிகா லாலின் கொலை இந்த அறிக்கையில் அழகி ஜெஸ்ஸிகா லால் கொலையுண்ட சம்பவம் பற்றிய விவரங்களும் மனு சர்மாவுக்கு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை பற்றிய விவரங்களும் அடங்கியிருக்க வேண்டும். வேறு எந்த தகவலும் இதில் இடம் பெறத் தேவையில்லை. 35 இந்தியாவின் பல பகுதிகளில் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் நிகழ்ந்த உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் அவற்றைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளும். தேவையான ஆவஙகள் உல்பா தீவிரவாத அமைப்புகளால் போலீசார் மற்றும் குடிமக்களைத் தாக்கி நிகழ்த்தப்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பற்றியும், போலீசாரும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு பற்றியும் நக்சலைட்டுத் தொந்தரவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றிய முழு விவரங்களைக் கூற வேண்டும் 36 நர்மதா அணைக்கட்டின் கட்டுமானத்தை எதிர்த்துப் போராட்டம் சர்ச்சைக்குள்ள அணைக்கட்டுக் கட்டுமானத்தை எதிர்த்து நர்மதா பசாவ் ஆந்தோலன் மேற்கொண்டுள்ள போராட்டம் தேவையான ஆவணம் சர்ச்சைக்குள்ள அணைக்கட்டுக் கட்டுமானத்தை எதிர்த்து நடத்தப்படும் பல சுற்றச்சூழல் வல்லுநர்களும் திரைப்பட நடிகர்களும் கலந்துகொண்டுள்ள நர்மதா பசாவ் ஆந்தோலனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தைப் பற்றிக் கூற வேண்டும். 37 நேபாளத்தின் மாறி வரும் அரசியல் குறிப்பைடு இமாலய ராஜ்ஜியமான நேபாளத்தில் வேகமாக மாறி வரும் அரசியல் காட்சியமைப்பு மன்னர் ஞானேன்திரர் ராஜதந்திர சதி செய்து ஆட்சியையும் அதிகாரத்தையும் அபகரித்ததை அடுத்து நாட்டில் அரசியல் கலவரமும் கலகமும் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும் விவரங்களை இந்த அறிக்கை எடுத்துரைக்க வேண்டும். 38 கிரெக் சாப்பலுக்கும் சௌரவ் கங்கூலிக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி ஒப்பந்தம் இந்திய பயிற்சியாளர் கிரெக் சாப்பலுக்கும் அணித்தலைவர் சௌரவ் கங்கூலிக்கும் இடையே ஏற்பட்டுள்ள சஞ்சலமான தற்காலிக அமைதி ஒப்பந்தம் சாப்பலுக்கும் கங்கூலிக்கும் இடையே உள்ள மனபேதம் பற்றியும் சாப்பல் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் கழகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலை பத்திரிகையாளர்கள் வெளியிட்டதைப் பற்றியும் இந்த அறிக்கை கூற வேண்ட்டும் 39 ஈராக் நாட்டிலுள்ள அமைவ்ரிக்க வீரர்கள் மீதான தாக்குதல்கள் ஈராக்கின் பல பகுதிகளில் அமெரிக்க வீரர்கள் மீது எய்தப்பட்ட தாக்குதல்கள் இந்த அறிக்கை ஈராக்க்கிலுள்ள அமெரிக்க வீரர்கள் மீது நடத்தப்பட்ட தொடர்தாக்குதல்கள் பற்றியும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பற்றியும் கூற வேண்டும். 40 பாகிஸ்தான் நீதித்துறையில் உள்ள ஊழல் பாகிஸ்தான் நீதித்துறையிலுள்ள ஊழல் பற்றியும் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி திரு.இப்திகர் முகமது சௌத்திரி அவர்களின் தற்காலிகப் பணிநீக்கம் பற்றியுமான விவரங்களைக் காண்க. இந்த ஆவணம் பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்ற அளவில் நிகழும் ஊழல் பற்றியும் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி பர்வேஜ் முஷரப் அவர்கள் கெட்ட நடத்தை என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்றும் காரணம் காட்டி தற்காலிகப் பணிநீக்கம் செய்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. பலதரப்பட்ட பாகிஸ்தானிய மக்களும் இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதுடன் இத்தகைய தீர்வை எதிர்த்து பொதுப் போராட்டம் நிகழ்த்தியும் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்ததும் ஜனாதிபதி சர்வதேச கண்டனத்துக்கு ஆளானதும் பின் இறுதியாக அவர் பின்வாங்கி திரு.சௌத்திரியை மீண்டும் பணியில் அமர்த்தியதும் ஆகிய விஷயங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருப்பது மக்களின் ஆர்வத்தை தூந்டும் விஷயங்கள் ஆகும். 41 பிரான்சு நாட்டின் புதிய தொழிலாளர் சட்டங்கள் பிரான்சு நாட்டில் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தியதை அடுத்து பெரும் எதிர்ப்பு பிரான்சு நாட்டு நாடாளுமன்றத்தில் முதல் வேலை ஒப்பந்த உடன்படிக்கை அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாணவர்களும் இளைஞர்கள் சங்கங்களும் வன்மையாகக் கண்டனம் செய்து எழுந்ததை அடுத்து அவர்கள் மீது பிரெஞ்சு காவலர்கள் வன்முறையை பிரயோகித்ததும், பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி இதை ஒழிக்கும்படி பரிந்துரைத்ததும், தொழிற்சங்கத் தலைவர்கள் இதனை திரும்பப் பெறாவிட்டால் சமீபத்தில் நடந்த வேலைநிறுத்தத்தை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதும் ஆகிய விஷயங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும். 42 வட கொரிய அணுசக்திக் கொள்கை : உலகக்கருத்து வட கொரியாவும் அதன் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களும் வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனை பற்றியும், அந்நாடு அணுசக்தி ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறுவது பற்றியும், அமெரிக்கா இது பற்றி ஆறுமுனை பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது பற்றியும், இதனை வட கொரிய அரசு ஏற்க மறுத்தது பற்றியும், அமெரிக்காவுடன் இருமுனைப் பேச்சுவார்த்தை நடத்த விரும்ப்பம் தெரிவித்தது பற்றியும், இது குறித்து உலகத் தலைவர்கள் கொந்டுள்ள கருத்துகள் பற்றியும் இந்த ஆவணம் விவரமாகக் கூற வேண்டும். 43 கல்விச்சாலைகளில் சீரான ஆடைக் கட்டுப்பாடு அவசியம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த அறிக்கை மாணவர்கள், அதிலும் குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பற்றிக் கூறுவதோடு, இது குறித்து எழுந்துள்ள கடுமையான சர்ச்சை பற்றியும், அதனால் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் கூற வேண்டும். 44 பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல்கள் லண்டன் மாநகரில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகள் உரிய ஆவணம் லண்டன் மாநகரில் 2005ஆம் ஆண்டு நான்கு தனிப்பட்ட தற்கொலைப்படையினர் நடத்திய தீவிரவாத தாக்குதல்களைப் பற்றியும் சமீபத்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் பற்றியும் விளக்கங்களைக் கூற வேண்டும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை, காவலர்கள் நடத்திய சோதனை மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்தது ஆகிய விவரங்களும் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். 45 உலக வெப்பமயமாதல் உலக வெப்பமயமாதல் அறிகுறிகளும் அதற்கான தீர்வுகளும் உரிய ஆவணங்கள் உலக வெப்பமயமாதல் குறித்த விவரங்கள் பற்றியும், அதன் காரணங்களும், அதனால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும், மனித சமுதாயம் சந்திக்க நேரிடக்கூடிய பாதிப்புகளைப் பற்றியும், வருங்காலத்தில் இதை தடுக்க அரசும் அரசுசாரா நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் கூற வேண்டும். 46 50 மணிநேர பெருமுயற்சிக்குப் பிறகு பிரின்சின் மீட்பு. 50 மணிநேர பெருமுயற்சிக்குப் பிறகு பிரின்ஸ் இருண்ட பள்ளத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வீடு திரும்பினார். இந்த ஆவணம் பிரின்ஸ் குமார் 50 மணிநேரம் 3 அடி பலகையில் இருண்ட ஈரமான பள்ளத்துக்குள்ளிருந்து மீட்கப்பட்ட விவரங்களைப் பற்றிக் கூற வேண்டும். இவை தவிர வேறு விவரங்களைப் பற்றிக் கூற வேண்டிய அவசியமில்லை. 47 நோபல் பரிசு காநாமல் போனது வங்காளத்துக் கவிஞர் ரபீந்திரநாத தாகூர் அவர்களின் நோபல் பரிசு திருட்டு போனது. புகழ்பெற்ற கவிஞரும் ஆசிரியருமான ரபீந்திரநாத தாகூர் அவர்கள் ஆசியாவில் இலக்கியத்திற்கு முதன்முதலில் பெற்ற நோபல் பரிசும் அவருடைய வேறு சில அரிய சித்திரங்களும் கலைப்பொருட்களும் 25 மார்ச், 2004 அன்று காநாமல் போன விவரங்களைப் பற்றி உரிய ஆவணம் கூற வேண்டும். இது தவிர இந்த விஷயத்தில் சி.பி.ஐ நடத்தி வந்த விசாரணையை திடீரென்று நிறுத்தி வைத்ததைப் பற்றியும் கூற வேண்டும். இது தவிர பிற நோபல் பரிசுகள் காநாமல் போனது பற்றிக் கூறவேண்டியது அவசியமில்லை. 48 நிதாரி கொலை வழக்கு 2006 நொய்டா கொலை வழக்கும் அதன் விசாரணையும் நிதாரி கிராமத்தில் நடந்த நொய்டாவின் தொடர் கொலைச் சம்பவங்களும், இந்த கொடூரத்திற்கு பலியான சிறுவர்களின் எண்ணிக்கையும் மற்றும் இதற்கு பலியான 20 வயது பெண் பற்றிய தகவல்களும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் கைதான விவரங்களும் காவல்த்துறையினரும் சி.பி.ஐ.யினரும் மேற்கொண்டுள்ள விசாரணை பற்றிய தகவல்களும் இந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்க வைண்டும். 49 உலகளாவிய இயற்கைப் பேரிடர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் இயற்கை பேராபத்துகள் உரிய ஆவணம் உலகின் பல பகுதிகளில் நிகழும் மலைச்சரிவுகள், எரிமலைவெடிப்புகள், சுனாமி, சூறைப்புயல், கட்ரீனா, பூகம்பம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேராபத்துகளைப் பற்றியும் உலகின் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் அளிக்கும் உதவி பற்றிய விவரங்களும், சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகள் அளிக்கும் உதவி பற்றிய விவரங்கள் கொண்ட அறிக்கையாக அமைந்திருக்க வேண்டும். 50 கொல்கத்தா புத்தகக் கண்காட்சி 2007 கொல்கத்தா புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் குறித்த சர்ச்சை சம்பந்தப்பட்ட ஆவணம் புத்தகக் கண்காட்சியின் மையக்கருத்தைப் பற்றியும், புதிய புத்தக வெளியீடுகள் பற்றியும், புத்தக ஆர்வலர்களின் கருத்துகளும், இடமாற்றம் குறித்த நிச்சயமின்மையும், இடமாற்றம் செய்த பின் சுற்றச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்த ஆட்சேபனைகளும் அவர்கள் கோரிய காரணங்கள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். 51 கல்விமுறையில் ஊழல் கல்விமுறையில் உள்ள ஊழலும் அதைத் தடுக்கும் முறையும் உரிய ஆவணம் மாணவர்சேர்க்கைகாக கல்வி நிறுவனங்கள் பெற்றுவரும் லஞ்சத்தைப் பற்றியும், கிராமப்புற மற்றும் நகர ஆசிரியர்களின் பணிஅமர்வு மற்றும் இடமாற்றத்திற்கு ஏற்கும் லஞ்சம் பற்றிய விவரங்களைப் பற்றிக் கூற வேண்டும். 52 2006-2007 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 2006-2007 ஆண்டிற்கான வரவு-செலவு மதிப்பீடும் அதன் விளைவுகளும் மந்திரித்துறையில் அறிவிப்புச் செய்யப்பட்ட மதிப்பீடு மற்றும் அறிவிக்கப்பட்ட பிரேரணைத்திட்டம், பிரேரணைத்திட்டத்தின் பொருளாதார விளைவு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வரவு-செலவு மதிப்பீட்டை பற்றிய இந்திய மக்களின் விமர்சனம் பற்றியவை தகுந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். 53 இந்தியா மற்றும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அணு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான அமெரிக்க அணு கொள்கை, ஒப்பந்த உடன்படிக்கை, இந்த ஒப்பந்தத்திற்கு பின்னால் உள்ள ஓட்டைகள், இரண்டு நாட்டிலும் உள்ள சில கட்சியினர் தெரிவிக்கும் ஆட்சேபனை, இந்த அணு ஒப்பந்தத்திற்க்கு தொடர்புடைய கேள்விகள் பற்றியவை தகுந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். 54 ஹெசைவி மற்றும் எய்ட்ஸ் தொற்றுநோய் உலகளவில் ஹெசைவி/எய்ட்ஸ் ஒரு பெரிய உடல்நலக் கவலைக்கிடமான ஒன்று. ஹெசைவியால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நோய்க்கான விளைவுகள், அறிகுறிகள், மேற்கொண்ட வைத்தியங்கள், ஹெசைவி/எய்ட்ஸ் படிப்படியாக பரவும் நிலை, நோய் தொற்றுவதை தடுக்கும் மருந்துகளும் வழிமுறைகளும் மற்றும் பாதிக்கப்பட்டோர் மீது பொதுமக்களின் கருத்து பற்றியவை தகுந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். 55 சானியா மிர்சாவின் டென்னிஸ் வாழ்க்கை மிகச் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய இந்திய டென்னிஸ் தாரகை சானியா மிர்சா சானியாவுக்கு கிடைத்த பரிசு மற்றும் சாதனை, சானியாவின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவின் தரப்பட்டியல், சானியாவின் சமீபத்திய தரப்பட்டியல், சானியா கலந்து கொள்ள வரவிருக்கும் போட்டிகள் போன்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆவணம். 56 செல்பேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு செல்பேசியின் உபயோகம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் போதை பொருளில்லாமல் அடிமையாக்கும் போதைப்பொருளாகும் செல்பேசி சம்பந்தப்பட்ட ஆவணம், செல்பேசியின் மிகப்பெரிய வளர்ச்சியால் விளையும் தீங்கு, செல்பேசி கதிர்களால் உருவாகும் நோய் அறிகுறி, ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டம், புகைப்பட செல்பேசியினால் உருவாகும் பிரச்சனைகளைச் சொல்லும் தகவல்களைக் கொண்டது. 57 அபூர்வமான மரிமானை கொன்ற சல்மான்கானின் வழக்கு அழிவு நிலையில் உள்ள மரிமானை கொன்ற வழக்கில் சல்மான்கானுக்குச் சிறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், அபூர்வமான மரிமானை கொலை செய்ததால் சல்மான்கான் கைது, அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட ஐந்து வருட சிறைதண்டனையை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு ஆகியவை இந்த ஆவணத்தில் உள்ளது. 58 தாய்லாந்தின் அரசியல் சதி தாய்லாந்து தலைவர்களின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் அதன் பின் பிளைவு நிறுத்தி வைக்கப்பட்ட தாய்லாந்து சட்ட அமைப்பு மற்றும் அந்த நாட்டின் அரசியல் சதியர்களால் கவிழ்க்கப்பட்ட பாராளுமன்ரம், தாய்லாந்தில் மனித உரிமை மீறல்கள் ஆகியவை இந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் ஆகும். 59 ஈராக் போரை எதிர்த்து அமெரிக்க குடிமக்களின் போராட்டம் ஈராக் போரைத் தொடர்ந்து அமெரிக்க குடிமக்கள் ஜார்ஜ் ட்பிள்யூபுஷ் எதிர்த்துப் போராட்டம் செய்கின்றனர் அமெரிக்க மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டம், பல இடங்களில் நடத்தப்பட்ட போரெதிர்ப்புகூட்டங்கள், புஷ்ஷுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய டீ-சர்ட்டுகள் அணிந்ததற்காக அமெரிக்க குடிமக்களின் கைது மற்றும் ஈராக் போரைப் பெரிதுபடுத்த பெரும்பான்மையான மக்களின் விருப்பம் ஆகியவை குறித்து ஆவணங்களில் இருக்க வேண்டும். 60 அல் கொய்தாவின் பயங்கரவாத நடவடிக்கைகள் அல் கொய்தாவின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறித்துத் தகவல் தரும் ஆவணங்களைத் தேடவும். அல் கொய்தாவின் பயங்கரவாத நடவடிக்கைகள், அவர்களின் தாக்குதலால் பாதிக்கப்ப்பட்ட நாடுகள், அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அல் கொய்தாவைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆவணங்களில் தகவல்கள் இருக்க வேண்டும். 61 ஹாரி பாட்டர் பித்து ஹாரி பாட்டர் புத்தகத்தை வாங்க உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆசை வெறி ஹாரி பாட்டர் புத்த வெளியீட்டால் உலகம் முழுவதும் ஏற்பட்ட பித்து, நள்ளிரவில் சுட சுட ஹாரி பாட்டர் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பற்றி ஆர்வலர்களின் கருத்து, புத்தகத்தை வெள்ளித்திரை வடிவில் பார்க்க ஆவலாய் இருக்கும் பார்வையாளர்கள் போன்ற தகவல்கள் இந்த ஆவணத்தில் உள்ளது. 62 மத்திய அரசு ஊழல் மத்திய அரசு அலுவலர்கள் தொடர்புடைய பல ஊழல் வழக்குகள் இதில் இடம்பெற வேண்டிய கோப்புகள் அரசில் உள்ள ஊழல், சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு இலாக்காவால் அடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசு அலுவலர்களின் கைது, ஊழலை எதிர்த்து நிகழ்ந்த போராட்டம் ஆகியவை ஆகும். 63 நேதாஜி மறைவில் உள்ள மர்மங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைவில் உள்ள எதிரும் புதிரும் மற்றும் நிலையற்ற செய்திகள் நேதாஜியின் மர்ம மறைவில் அரசாங்கம் கூறும் விமான விபத்து, அரசாங்கம் வெளியிட மறுக்கும் ரகசிய கோப்புகள், இந்திய மக்கள் கூறும் நேதாஜியின் மறைவைப் பற்றிய உண்மைகளும் மர்மங்கள் அடங்கிய கோப்புகள் இதில் இடம்பெறலாம். மற்ற தகவல்களைக் கொண்ட கோப்புகள் இடம்பெறக்கூடாது. 64 சபர்வால் கொலை வழக்கு எபிவிபி மாணவர்களால் கொலை செய்யப்பட்ட உஜ்ஜைன் பேராசிரியர் எச் எல் சபர்வால் உஜ்ஜைனியில் இரக்கமற்ற முறையில் எபிவிபி மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பேராசிரியர் சபர்வால், கண்கூடாக பார்த்த சாட்சியாளர்களின் விரோத முறை, கொலையாளிகள் மேல் குற்றம் சாட்டியது, வேலை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் பற்றிய விவரங்கள் தகுந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். மற்ற கொலை வழக்குகள் சம்பந்தமில்லாதவை. 65 தாஹீத் இப்ராஹிமை தேடும் புலனாய்வுத் துறை முக்கிய குற்றவாளி தாஹீத் இப்ராஹிமை புலனாய்வுத் துறை தொடர் தேடல் சர்வதேச தீவிரவாதி தாஹீத் இப்ராஹிமின் நடவடிக்கைகள், தாஹீதை பிடிக்க உதவி செய்யுமாறு புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டது, தாஹீத்தின் தேசிய இனத்தை பற்றிய கேள்வி மற்றும் தாஹீத் இப்ராஹிம் பதுங்க அடைக்கலம் கொடுத்த சர்வதேச இனம் மீது நடவடிக்கை எடுத்தல் ஆகியவை தகுந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். 66 காதிம் உரிமையாளர் கடத்தல் வழக்கு காதிம் உரிமையாளர் பார்த்தோ பார்டிம் ராய் பர்மன் கடத்தல் வழக்கு காதிம் உரிமையாளர் கடத்தல், அதிகப்படியான பணம் கேட்டு மிரட்டல் குற்றவாளிகளின் கைது மற்றும் தண்டனை, இந்த கடத்தல் வழக்கில் புலனாய்வுத்துறையின் பங்கு ஆகிய விவரம் அடங்கிய ஆவணம் இடபெற்றிருக்கும் . 67 பொஃபோர் மீண்டும் அவமதிப்பு பொஃபோரின் மோசடி மற்றும் குயாட்ரோச்சியின் காங்கிரஸ் உடனான கூட்டும். மன்மோகன் சிங்கின் ஆட்சி காலத்தில் நடந்த பொஃபோரின் மோசடியினால் இந்திய அரசியலில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிய விவரங்கள், குயாட்ரோச்சியின் வங்கி கணக்கை மீட்பதில் எதிர் கட்சிகளின் பங்கு, குயாட்ரோச்சியை இந்திய அரசுக்கு ஒப்படைப்பதை அர்ஜென்டைனா கோர்ட் நிராகரிப்பு மற்றும் சர்வதேச காவல் துறை ஒட்டாவியோ குயாட்ரோச்சிக்கு எதிராக 'ரெட் கார்னர்' நோட்டீஸ் சம்பத்தப்பட்டவை தகுந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும். 68 அமர்நாத் யாத்திரை அமர்நாத்திற்க்கு புணித யாத்திரை மற்றும் அதை தொடரும் சம்பவங்கள். அமர்நாத்தின் புணித ஆலயம், பக்தர்களின் பயணம், ஒன்றுமறியா பக்தர்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் இயற்கையாய் உருவான ஆலத்தின் மீதான தகராறுகள் சம்பத்தப்பட்டவை தகுந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும். மற்ற தகவல்கள் இங்கு தேவை இல்லை. 69 இந்திய ரயில்வே விபத்துகள் இந்திய ரயில்வேயில் நடந்த விபத்துகள். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகள், விபத்திற்கு பிறகான கணக்குகள், இறப்புகள் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை, மற்றும் அரசு தரும் உதவிகள் பற்றியவை ஆவணத்தில் இடம்பெற வேண்டும். மற்ற தகவல்கள் இங்கு தேவை இல்லை. 70 பாலிவுட்டில் மறுபடயெடுப்பு தரமான ஹிந்தி படங்களை பாலிவுட்டில் மறுபடயெடுப்பு செய்யும் வரிசை பழக்கத்தில் உள்ளது. புகழ்பெற்ற மற்றும் தோல்வியடைந்த மறுபடயெடுப்பு செய்த படங்கள், படங்களைப்பற்றி பார்வையாளர்களின் கேலிக் கருத்துகள், படத்தயாரிப்புப்பற்றி இயக்குனர், நடிகர் நடிகைகளின் விளக்கங்கள் ஆகியவை தகுந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும். மற்ற தகவல்கள் இங்கு தேவை இல்லை. 71 இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் பக்தர்கள் இந்திய முஸ்லீம் பக்தர்கள் மெக்காவுக்கு வருகை. இந்திய முஸ்லீம் பக்தர்கள் மெக்காவுக்கு வருகை, ஹஜ் பக்தர்கள் விஸா வேண்டுமெனில் கண்டிப்பாக போலியோ தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற சவுதி அரேபிய அரசின் ஆணை மற்றும் ஹஜ் பக்தர்களுக்கு உதவிப்பணம் தர அரசு மறுப்பு ஆகியவைப் பற்றி தகுந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும். 72 முத்திரைத்தாள் மோசடி அரசு முத்திரைத்தாள் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் மோசடியில் தொடர்புடைய கைது மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் விவரங்கள் ஆவணத்தில் சேர்க்கப்பட வேண்டும். இதைத் தவிர மற்ற விவரங்கள் சம்பந்தமில்லாதவை. 73 உலகக் கோப்பையில் ஜினேடைன் ஜிடேன் தலையால் முட்டிய நிகழ்ச்சி 2006-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை இறுதி போட்டியில் இத்தாலிய வீரர் மார்கோ மெடராசி சினமூட்டுகிற மற்றும் அவமதிப்பான வார்த்தைகளை பேசியதைத் தொடர்ந்து ஜினேடைன் ஜிடேன் அவரை தலையால் முட்டினார். உலகக் கோப்பை இறுதி போட்டியின் போது இத்தாலிய விளையாட்டு வீரர் மார்கோ மெடராசி அவமதிப்பாக பேசியதைத் தொடர்ந்து ஜினேடைன் ஜிடேன் அவரை தலையால் முட்டிய விவரம் தகுந்த ஆவணங்களில் சேர்க்கப்பட வேண்டும். ஜிடேன் மன்னிப்பு கேட்ட விவரம், மெடராசிக்கு தண்டனை அளிக்க வேண்டுகோள் விடுத்தது மற்றும் தங்கப் பந்து விருதை வென்ற விவரம் ஆகியவையும் சம்பந்தப்பட்டவையே. 74 இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை இந்திய பாகிஸ்தான் உறவுமுறை மற்றும் அவ்விரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் எல்லைப் பிரச்சனை பாகிஸ்தான் மூலமாக இந்தியாவின் காஷ்மீருக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகள், இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள எல்லை பிரச்சனையை தீர்க்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முதலிய விவரங்கள் தகுந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். இவ்விவரங்களை தவிர மற்றவை சம்பந்தமில்லாதவை. 75 பிரிட்டனின் புதிய பிரதமர் கோர்டன் பிரவுன் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைத் தேர்ந்தெடு கோர்டன் பிரவுன் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றது, கோர்டன் பிரவுன் பிரிட்டனின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி தொழிலாளர் கட்சியின் முடிவு, கொள்கைகளின் மறு பரிசீலனை, தொழிலாளர் கட்சி நன்மைப் பெற பிரவுன் அளித்த வாக்குறுதிகள் முதலிய விவரங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும்.