76
குஜ்ஜார், மீனாஸ் இடையே மோதல்
பழங்குடியினர் பட்டியலில் குஜ்ஜாரை இணைத்ததற்கு மீனாஸ் தலைவர்களின் எதிர்ப்பு.
பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என குஜ்ஜார்களின் கிளர்ச்சி. மீனாஸ் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு. மீனாஸ் தலைவர்கள் எதிர்ப்பதற்கான பின்னணி காரணங்கள் என்ன? இவ்விரு பிரிவினரிடையேயான போராட்டத்திற்கு மூலக்காரணம் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
77
ஹெஸ்புல்லா கொரில்லாவின் தாக்குதல்
இந்தியா மற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது ஹெஸ்புல்லா கொரில்லா தாக்குதல் .
இஸ்ரேலில் முகாமிட்டுள்ள இந்திய மற்றும் இஸ்ரேலிய அமைதிப் படையினர் மீது ஹெஸ்புல்லா கொரில்லாவின் தாக்குதல் பற்றிய தகவல் இந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும் .
78
அத்வானி, சிங்கால் இடையே ராமர் கோயில் பற்றிய கருத்து வேறுபாடு
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் L.K.அத்வானி இடையே ராமர் கோயில் பற்றிய கருத்து வேறுபாடு.
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் L.K.அத்வானி இடையேயான ராமர் கோயில் பற்றிய கருத்து வேறுபாடு, இந்த ஆவணத்தில் இடம்பெற வேண்டும். இவ்விரு தலைவர்கள் இடையே உள்ள மற்ற கருத்து வேறுபாடுகளோ அல்லது ராமர் கோயில் பிரச்சனைப் பற்றிய மற்ற தலைவர்களின் கருத்து வேறுபாடுகளோ இந்த ஆவணத்தில் இடம்பெற தேவையில்லை.
79
சீனா, எவரெஸ்ட் சிகரம் இடையிலான சாலைக் கட்டுமானம்
சீனா, எவரெஸ்ட் சிகரம் இடையிலான சாலைக் கட்டுமானத் திட்டம்.
இந்த ஆவணத்தில் சீனா, எவரெஸ்ட் சிகரம் இடையிலான சாலைக் கட்டுமானத் திட்டம் பற்றி இடம்பெற வேண்டும். இந்த தகவல் பற்றிய இந்திய மற்றும் சீனத் தலைவர்களின் கருத்துகள் இதில் இடம் பெறலாம்.
80
அத்வானி மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆரம்பம்
அத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்த ஆவணத்தில் அத்வானி மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை, முதல் தகவல் அறிக்கை தாக்கல் மற்றும் ரேபரேலி நீதிமன்றத்தின் உத்தரவு பற்றிய தகவல்கள் இடம்பெற வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது, அலகாபாத் நீதிமன்றத்தில் என்ன நடந்தது பற்றிய தகவல்கள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
81
இந்தியாவில் ஜப்பானிய என்செபாலிடிஸ்ஸின் நோய் தடுப்பு முகாம் நடத்துவதில் சிக்கல்
இந்திய சமூக நலத்துறை அமைச்சகம், இந்தியக் குழந்தைகளை ஜப்பானிய என்செபாலிடிஸ் நோயிலிருந்து காப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளது. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்கள் ஏற்படும்?
இந்தியக் குழந்தைகளை ஜப்பானிய என்செபாலிடிஸ் நோயிலிருந்து காப்பதற்கு தடுப்பு முறைகள் என்ன? அதற்கு தேவையான தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை என்பது இதில் உள்ள முக்கிய பிரச்சனை ஆகும். அதனால் வெளிநாட்டிலிருந்து (முக்கியமாக சீனா) நோய் தடுப்பு மருந்து இறக்குமதி செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது . இது தொடர்பான விவாதங்களும் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
82
ஸ்ரீநகர், முசாபராபாத் இடையே பேருந்து போக்குவரத்துத் திட்டம்
ஸ்ரீநகர், முசாபராபாத் இடையே பேருந்து போக்குவரத்துத் திட்டம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையைத் தீர்ப்பதில் இதன் பங்கு .
ஸ்ரீநகர், முசாபராபாத் இடையே பேருந்து போக்குவரத்துத் திட்டம். இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையைத் தீர்ப்பதில் இதன் பங்கு பற்றிய நம்பிக்கை? தீவிரவாதக் குழுக்கள் பேருந்துகளைத் தாக்கி போக்குவரத்து சேவையை நிலைக்குலையச் செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பான அச்சுறுத்தல்கள், இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
83
லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் தேர்தல் பிரச்சாரம்
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கு லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் தேர்தல் முயற்சி .
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கு லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் தேர்தல் முயற்சி பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம் . மிக முக்கியமாக முஸ்லிம் வாக்காளர்களுக்குக் கொடுத்த வசீகரமான வாக்குறுதிகளும் கவர்ச்சிகரமான திட்டங்களும் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம் .
84
சுவாமி ராம்தேவின் மீது பிருந்தா காரத்தின் குற்றச்சாட்டு
சுவாமி ராம்தேவ் விற்பனைச் செய்த மருந்துகளில் மாமிசம் கலந்துள்ளதாக பிருந்தா காரத் குற்றச்சாட்டு .
சுவாமி ராம்தேவ் விற்பனைச் செய்த மருந்துகளில் மாமிசம் கலந்துள்ளதாக பிருந்தா காரத் குற்றம்சாட்டுகிறார். அதனால் இந்தியாவின் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரும் நெறிமுறையான உரிமம் மற்றும் லேபிள் அத்துமீறல் நடந்துள்ளது பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம் .
85
மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அபு சலீம், சிறையில் அடைப்பு
நீதிமன்ற உத்தரவின் பேரில் மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அபு சலீம், சிறையில் அடைக்கப்பட்டான்.
மும்பை குண்டுவெடிப்பில் அபு சலீமின் தொடர்பு பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். இவனுக்கு எதிரான மற்ற குற்றச்சாட்டுகளான பிரதீப் ஜெயின் கொலை வழக்கு, போலி பாஸ்போர்ட் வழக்கு ஆகிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறத் தேவையில்லை.
86
மும்பை, டெல்லி விமானநிலையங்கள் தனியார்மயமாக்கம்
மும்பை, டெல்லி விமானநிலையங்கள் தனியார்மயமாக்குதல் தொடர்பான அரசின் முடிவு மற்றும் அது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அறிக்கை .
மும்பை, டெல்லி விமானநிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் தனியார்மயமாக்குதல் தொடர்பான அரசின் முடிவு பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். இந்த இரண்டு விமானநிலையங்களின் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர் லிமிடெடின் பங்களிப்புப் பற்றிய தகவல்கள் இதில் இடம்பெறலாம். ஆனால் இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறத் தேவையில்லை.
87
சியாசினில் இராணுவத்தின் நிலைக் குறித்து மன்மோகன் சிங் மற்றும் பர்வேஸ் முஷாரப் இடையிலான பேச்சுவார்த்தை
சியாசினில் இராணுவத்தின் நிலைக் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இடையிலான பேச்சுவார்த்தை.
சியாசினில் இராணுவத்தின் நிலைக் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இடையிலான பேச்சுவார்த்தைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
88
சங்கர் ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபலங்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
சங்கர் ராமன் கொலை வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சங்கர் ராமன் கொலை வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் இளைய சங்கராச்சாரியர் விஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
89
காங்கிரஸ் மந்திரிகளின் எண்ணெய்க்கு உணவு ஊழல்
வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் மற்றும் சில காங்கிரஸ் மந்திரிகள் ஈராக்கின் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஊழல் தொடர்பான விசாரணை .
வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் மற்றும் சில காங்கிரஸ் மந்திரிகள் ஈராக்கின் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஊழல் தொடர்பான விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவினரின் நடவடிக்கைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
90
இந்தியப் பிரதிநிதிகள் பங்களாதேஷுக்கு விஜயம்
டாக்காவுக்குச் சென்ற இந்தியப் பிரதிநிதிகள் நீர் பங்கீடு மற்றும் ராணுவ பாதுகாப்புப் பயிற்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பங்களாதேஷுக்குச் சென்ற இந்தியப் பிரதிநிதிகள் பற்றிய கீழ்கண்ட தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
- இந்தியா-பங்களாதேஷ் இடையிலான தீஸ்தா நதிநீர் பங்கீடு.
- ராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் பயிற்சி முகாம் .
- தீவிரவாதக் குழுக்கள் தங்கள் மண்ணில் இல்லை என்ற பங்களாதேஷின் மறுப்பிற்கு இந்தியா வருத்தம்.
- உல்பா தீவிரவாதிகள் பங்களாதேஷில் பயிற்சி பெறுவதும் மேலும் அங்கிருந்து இயக்கப்படுவதும் நடந்து வருகிறது என இந்தியா அச்சம் தெரிவித்துள்ளது.
91
பிரதீபா பாட்டீல் மீதான பொருளாதார ஊழல் குற்றச்சாட்டு
பிரதீபா பாட்டீல் மீதான பொருளாதார ஊழல் நடவடிக்கை .
பிரதீபா பாட்டீல் மீதான பொருளாதார ஊழல் குற்றச்சாட்டு, உதாரணமாக கார்கில் நிதியை தவறாகப் பயன்படுத்தியது, இவரது உறவினர்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதது முதலிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். பிரதீபா பாட்டீல் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தத் தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம் .
92
இலங்கை விடுதலைப் புலிகளின் நடவடிக்கை
இலங்கை விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகள் .
விடுதலைப் புலிகளின் உள்நாட்டுப் போர், இலங்கை ராணுவத்தினரைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
93
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியது படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியது படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டனர் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
94
இந்திய கடற்படை தன் இரகசியங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு
இந்திய கடற்படை தன் இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் மேல் நடவடிக்கை.
இந்திய கடற்படை தன் இரகசியங்களை அன்னிய நாட்டவரிடம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மேல் சிபிஐ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
95
பிக் பிரதர் நிகழ்ச்சியில் இனவெறி சண்டை
பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி, ஜேட் கூடி இடையே இனவெறி சண்டை .
புகழ்பெற்ற பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஜேட் கூடி, ஷில்பா ஷெட்டியின் மீதான இனவெறி மற்றும் இச்செயலுக்கு ஷில்பா ஷெட்டியின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
96
பிரமோத் மகாஜனைக் கொன்ற கொலையாளி
பிரமோத் மகாஜனைக் கொன்ற கொலையாளி நீதிமன்றத்தில் தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார்.
பிரமோத் மகாஜனைக் கொன்ற கொலையாளி நீதிமன்றத்தில் தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார். இதைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
97
அம்பானி சகோதரர்களுக்கு இடையே ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமைத் தொடர்பான மோதல்
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இடையே ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமைத் தொடர்பான குடும்பத் தகராறு
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இடையே ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமைத் தொடர்பான குடும்பத் தகராறு மற்றும் K.V.கமத்தின் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பின் இறுதி அறிக்கைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
98
அருணாச்சல பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைக்கு இந்தியா எதிர்ப்பு
அருணாசல பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைக்கு இந்தியா எதிர்ப்பு .
அருணாச்சல பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைக்கு இந்தியா எதிர்ப்பு, இதற்கு இந்தியா வைத்துள்ள ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். அருணாச்சல பிரதேச அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கைகள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
99
லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல்
லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் பற்றிய ஆதாரங்கள்.
இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பல்லாயிரம் கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
100
மோனிகா பேடி மீதான போலி பாஸ்போர்ட் வழக்கு
ஹைதராபாத்தில் மோனிகா பேடி மீதான போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் போலி பெயரில் மோனிகா பேடி பாஸ்போர்ட் எடுத்தது தொடர்பான செய்திகள், இதன் மீது சிபிஐயின் நடவடிக்கைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். வேறு இடங்களில் நடைப்பெற்ற போலி பாஸ்போர்ட் வழக்குகள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
101
பிரமோத் மகாஜனனின் வீட்டில் போதை விருந்து
மறைந்த பிரமோத் மகாஜனனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவரது மகன் ராகுல், பிபெக் மொய்த்ரா மற்றும் பலர் கலந்து கொண்ட போதைப்பொருள், மதுபான விருந்து.
மறைந்த பிரமோத் மகாஜனனின் மகன் ராகுல் மகாஜன் மற்றும் பிபெக் மொய்த்ரா கலந்துகொண்ட இரவு நேர போதைப்பொருள், மதுபான விருந்து பற்றிய தகவல்கள், யார் யார் கலந்து கொண்டார்கள், நச்சு போதைப்பொருள் பற்றிய தகவல்கள், அதன் பின்விளைவுகள், அதன் அரசியல் பின்விளைவுகள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். ராகுலின் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை முதலியன இந்த ஆவணத்தில் இடம்பெறத் தேவையில்லை.
102
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்ட ஊழல்
சோயப் அக்தர் மற்றும் முகம்மது ஆசிப் மீதான ஊக்கமருந்து வழக்கு .
சோயப் அக்தர் மற்றும் முகம்மது ஆசிப் மீதான ஊக்கமருந்து வழக்கு, CAS நடவடிக்கை பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
103
பக்லிஹர் நீர் மின் ஆற்றல் உற்பத்தி திட்டத்தில் இருதரப்பு பிரச்சனைகள்
பக்லிஹர் நீர் மின் ஆற்றல் உற்பத்தி திட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகளில் இந்தியாவின் நிலை என்ன?
சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீர் பங்கீடு, பக்லிஹர் நீர் மின் ஆற்றல் உற்பத்தி திட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசின் நிலை குறித்த தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
104
ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயா பச்சன் நீக்கம்
ஆதாயம் தரும் இரட்டைப் பதவியால் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஜெயா பச்சனின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் என்ன?
ஆதாயம் தரும் இரட்டைப் பதவியால் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயா பச்சன் நீக்கப்பட்டார். இதற்கு ஜெயா பச்சனின் எதிர் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
105
தாஜ் வணிக வளாக ஊழல்
உத்திரப் பிரதேச முதலமைச்சர் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளின் பல கோடி மதிப்பிலான தாஜ் வணிக வளாக ஊழல் பற்றிய குற்றப் புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கை.
மாயாவதி, D.S.பகா, R.K.சர்மா ஆகியோரின் மீது ரூ.175 கோடி மதிப்பிலான தாஜ் வணிக வளாக ஊழல் பற்றிய குற்றப் புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கை பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
106
தஸ்லீமா நச்ரீனின் "ஷேம்" நாவலுக்குத் தடை
முஸ்லிம் மதக்கொள்கைகளைப் புண்படுத்தியதால் தஸ்லீமா நச்ரீனின் "ஷேம்" நாவலுக்குத் தடை.
தஸ்லீமா நச்ரீனின் "ஷேம்" நாவலுக்கு முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு, நாவல் தடைசெய்யப்பட்டது பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். மற்ற நாவல்கள் பற்றிய தகவல்கள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
107
உத்திரப் பிரதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட குறுந்தகடு வெளியீட்டில் ஆரவாரம்
இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முஸ்லிம் மதத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட குறுந்தகடு வெளியிட்டதாக பிஜேபியின் மீது நடவடிக்கை. அது தொடர்பாக பிஜேபி எடுத்த முடிவுகள்.
உத்திரப் பிரதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட குறுந்தகடு தயாரிப்பு/மாற்றம், கட்சித் தொண்டர்களின் தற்காலிக நீக்கம் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
108
விஸ்தரிக்கப்பட்ட நாகாலாந்து
NSCN, ஒரு நாகாலாந்து ஒன்றியம், விஸ்தரிக்கப்பட்ட நாகாலாந்து வேண்டும் என்ற கோரிக்கை, அதற்கு அண்டை மாநிலத்தாரின் எதிர்ப்பு.
விஸ்தரிக்கப்பட்ட நாகாலாந்து வேண்டும் என்ற ஒரு அமைப்பின் கோரிக்கை, அதற்கு அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எதிர்ப்பு பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
109
ராஜ் தாக்ரே புதிய அரசியல் கட்சி தொடங்கினார்
புதிய கட்சி தொடங்கும் தன் முடிவை ராஜ் தாக்ரே மும்பையில் வெளியிட்டார் .
ராஜ் தாக்ரே மற்றும் அவரது உறவினர் உத்தவ் தாக்ரே (பால் தாக்ரேவின் மகன்) இடையே கருத்து மோதல் மற்றும் மும்பையில் ராஜ் தாக்ரேவின் புதிய கட்சி தொடங்கும் முடிவு பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
110
சீனா-இந்தியா இடையே எல்லை வர்த்தகம்
நாதுலா மூலமான எல்லை வர்த்தகம் மற்றும் சீனா-இந்தியா உறவுகளின் தாக்கம் .
எல்லை வர்த்தகம் மூலம் சீனா-இந்தியா இடையே நல்லுறவு மேம்படுத்துதல், எதிர்பார்ப்புகள், இவ்விஷயத்தில் இரு நாட்டு அதிகாரிகளின் புரிந்துகொள்ளல், வாதங்கள் முதலிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். நாதுலா வழியாக பொருட்களின் நடமாட்டம் இதில் இடம்பெறத் தேவையில்லை.
111
மும்பையில் நடன விடுதிகளுக்கு தடை
மும்பையில் நடன விடுதிகளுக்குத் தடைச் செய்யப்பட்டதற்கு நடனமாடுபவர்களின் எதிர்ப்பு .
மும்பையில் நடன விடுதிகளைத் தடைச் செய்ய உத்தரவிட்டது மகராஷ்டிர சட்டச்சபை, நடனமாடுபவர்களின் எதிர்ப்பு மற்றும் ஊர்வலங்கள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
112
குட்கா தயாரிப்பாளர்களுடனான தாதாக்களின் மறைமுகத் தொடர்பு
கோவா மற்றும் மாணிக்சந்த் குட்கா தயாரிப்பாளர்களுடனான தாவூத் இப்ராஹிமினின் மறைமுகத் தொடர்பு.
கோவா மற்றும் மாணிக்சந்த் குட்கா தயாரிப்பாளர்களுடன் பிரபல தாதா தாவூத் இப்ராஹிமின் மறைமுகத் தொடர்பு பற்றிய செய்திககள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். தாவூத் இப்ராஹிமின் மற்ற தயாரிப்பாளர்களுடனான செய்திகள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
113
பங்களாதேஷில் அரசியல் மோதல்
பங்களாதேஷில் BNP உட்கட்சி பூசல் மற்றும் அவாமி லீக்குடனான மோதல்.
BNP ஆதரவாளர்கள் மற்றும் அதிலிருந்து வெளியேறியவர்கள் இடையே மோதல், ஷேக் அசினா மற்றும் கலிதாஜியா ஆதரவாளர்கள் இடையே மோதல், இந்த மோதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
114
பாதுகாப்புத் துறையின் ஆயுத ஊழல் விசாரணை
ஜார்ஜ் பெர்ணான்டர்ஸ், டெனில் இடையேயான ஆயுத ஒப்பந்தம், இந்த முறைக்கேடிற்கு பிரணாப் முகர்ஜியின் விசாரணைத் தேவை என்ற கோரிக்கைப் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டர்ஸ், தென்னாப்பிரிக்க நிறுவனமான டெனிலுடனான ஆயுத ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் குறித்த பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் விசாரணைப் பற்றிய தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
115
வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு
சங்கமோசன் கோயிலில் தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்தோர்.
வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள சங்கமோசன் கோயிலில் முதல் குண்டு வெடித்தது, இதில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
116
எண்கவுண்டர் நிபுணர் தயா நாயக்
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தயா நாயக்கின் மீது ACBயின் நடவடிக்கை என்ன?
லஞ்ச ஒழிப்புத் துறையினர் எண்கவுண்டர் நிபுணர் தயா நாயக்கின் மீது எடுத்த நடவடிக்கைப் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். அவர் மனைவி மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய செய்திகள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
117
கலிங்காநகரில் நிலத் தகராறு
கலிங்காநகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஒரிசா மாநில அரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை .
கலிங்காநகரில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசி கலைவதற்காக அரசு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு பழங்குடியினர் வேண்டினர் . ஒரிசா மாநில அரசு ஒரு மத்தியஸ்தரை நாடியது. இது சம்பந்தமான செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். சந்திப்பு பற்றிய செய்திகள் இதில் இடம்பெறத் தேவையில்லை.
118
அயோத்தியாவில் தீவிரவாத தாக்குதல்
சக்தி வாய்ந்த அயோத்தியா தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்கள் இருப்பது சாத்தியம் .
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை, அரசியல் போராட்டங்கள், இதன் பின்னணியில் பாகிஸ்தானியத் தீவிரவாதக் குழுக்கள், இவ்விஷயத்தில் பிஜேபியின் மத நம்பிக்கை பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
119
தாஜ்மகால் சச்சரவு
தாஜ்மகால் பற்றிய சச்சரவு .
தாஜ்மகால் வக் வாரியத்தின் சொத்தா? உத்தரப் பிரதேச சுன்னி வக் வாரியத்திற்கு சொந்தமா? அதற்கான ஆதாரம்?
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் இதற்கான ஆதாரங்கள் பற்றிய செய்திகள் இதில் இடம்பெறாலாம்.
தாஜ்மகால் தனியார்மயமாக்கல் தொடர்பான செய்திகளும் இதில் இடம்பெறாலாம்.
120
அனரா குப்தா செக்ஸ் சிடி அவதூறு
மிஸ் ஜம்மு, அனரா குப்தாவிற்கு எதிரான செக்ஸ் சிடி அவதூறு மற்றும் ஆந்திரப் பிரதேச தொல்லியல் துறையினரின் அறிக்கை.
அனரா குப்தா செக்ஸ் சிடி அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் ஆந்திரப் பிரதேச சட்ட ஆய்வுத் துறையினரின் அறிக்கை , இதை ஆதாரமற்றது எனத் தெரிவிக்கிறது. இந்த வழக்கு பற்றிய விவரம், ஆந்திர பிரதேச சட்ட ஆய்வுத் துறையினரின் அறிக்கை பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
121
சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு
சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு.
சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு, அதில் காயமடைந்தவர் மற்றும் மரணமடைந்தவர் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
122
சஞ்சய் தத் சரணடைந்தார்
1993-ல் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத் சரணடைந்தார்.
1993-ல் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத் சரணடைந்தது பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். நீதிமன்றம் சஞ்சய் தத் சரணடைவதற்கு கால நிர்ணயம் செய்தது பற்றிய செய்திகளும் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்.
123
யாசர் அராபத்தின் மரணம்
பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மரணம்.
பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மரணம் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். பாலஸ்தீனத்தில் அரசியல் உறுதித்தன்மை இல்லாதது பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறத் தேவையில்லை.
124
இந்திய மாநிலங்கள் பலவற்றில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் விற்பனை
இந்திய மாநிலங்கள் பலவற்றில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் விற்பனை.
சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் விற்பனை நடைபெற்ற இந்தியாவின் பல்வேறு இடங்கள் பற்றிய செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம். இதில் ஈடுபட்ட மாநிலங்களின் பெயர்களும் இதில் இடம்பெற வேண்டும்.
125
லால் மஜ்ஜித் மீதான தாக்குதல்
இஸ்லாமாபாத்தில் லால் மஜ்ஜித்தை அடிப்படைவாத மாணவர்கள் முற்றுகை.
கீழ்க்கண்ட செய்திகள் இந்த ஆவணத்தில் இடம்பெறலாம்: லால் மஜ்ஜித்தின் மத குரு கைது, அவரை கைது செய்ததற்காக அடிப்படைவாத மாணவர்கள் லால் மஜ்ஜித்தில் மறியல், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான மோதல்.